முதலிடத்தில் இந்திய வீராங்கனை – ஐசிசி தரவரிசை

169
INDINA4.3.19

ஐசிசி பெண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளது.