இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 14,033 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – ரயில்வே தேர்வு வாரியம்

477

இந்திய ரயில்வேயில், 13 ஆயிரத்து 34 இளநிலை பொறியாளர்கள், 48 இளநிலை தொழில்நுட்ப பொறியாளர்கள், 456 உதிரிபாகங்கள் டிப்போ மேலாளர் உள்ளிட்ட 14 ஆயிரத்து 33 காலி பணியிடங்கள் உள்ளன. காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் வரும் ஜனவரி 2-ஆம் தேதியில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதில் 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ., B.E., M.E., உள்ளிட்ட படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவிகிதத்திற்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாயும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு கட்டணத்தில் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.