“ஒரே எலித்தொல்லை.. அதான்..” – 5.89 கோடியை செலவு செய்த இந்திய ரயில்வே..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!

407

இந்திய ரயில்வேயின் சென்னை மண்டலம் ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரத்து 300 ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

ஜூலை 17-ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில், சென்னை மண்டல ரெயில்வே சில வருடங்களாகவே எலித் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், அவை பல சேதங்களை செய்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதிகாரிகளும் எலிகளை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் 5.89 கோடி ரூபாய் எலிகளை ஒழிக்க மட்டுமே செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் குறைந்தபட்சமாக 2,636 எலிகளை மட்டுமே பிடிக்க முடிந்ததாகவும், அதில் 1,715 எலிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும் 921 எலிகளை ரெயில்வே பயிற்சி மையத்திலும் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதில் தோராயமாக ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of