தமிழகத்தில் புதிய ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கும் பியூஸ் கோயல்

211

தமிழகத்தில் 3 புதிய ரயில்களின் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் சிறிய நகரங்களை ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில் 10 பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான வழித்தடங்கள் தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.

இதன் தொடர்ச்சியாக, தேர்வு செய்யப் பட்ட 10 வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ரயில்வே அமைச் சர் பியூஸ் கோயல் இன்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதில், ரயில்வே இணை அமைச் சர் சுரேஷ் அன்காடி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தில் சேலம் – கரூர், பழநி – கோயம்புத்தூர், பொள்ளாச்சி – கோயம்புத்தூர் இடையே 3 புதிய ரயில் களின் சேவை தொடங்கப்படுகின்றன.