“மாற்றங்கள் ஏற்பட்டாலும் பயனுள்ளதாக இருக்கும்” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

455

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் மற்றும் அதன் வீரியம் தொடர்பாக முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகின்றன.

அந்த வகையில், குஜராத்தில் உள்ள பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில்,  கொரோனா வைரஸில் 3 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், தற்போது ஆராய்ச்சியில் உள்ள கொரோனா தடுப்பூசிகளின் திறன் குறித்து பரவலாக கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானி கங்காகேத்கர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிறது என தெரிவித்தார்.

சிறிய காலத்தில் வைரஸில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றும், கொரோனா வைரஸில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், தற்போது ஆராய்ச்சியில் உள்ள தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் விளக்கமளித்தார்.

Advertisement