அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிவு

608

மும்பை: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தகப்போர் பதற்றம் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிந்தது. அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.18 ஆகவும், டீசல் விலை ரூ79.57 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement