“மசாஜ் செய்கிறேன்..” இளம்பெண்ணால் சிக்கலில் சிக்கிய விஞ்ஞானி..!

1858

டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா பகுதியில் வசித்து வரும் 35 வயதான விஞ்ஞானி, இணையத்தில் மசாஜ் பார்லரின் செல்போன் நம்பரை தேடியுள்ளார். அப்போது, அவருக்கு கிடைத்த நம்பருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மறுமுனையில் பேசிய பெண், விஞ்ஞானியை ஓயோ ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற அவரை, அந்த பெண் கடத்திவிட்டு, விஞ்ஞானியின் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனை அறிந்த விஞ்ஞானியின் மனைவி, காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், அந்த ஓட்டல் அறைக்கு வந்த காவல்துறையினர், சுனிதா என்ற பெண்ணையும், ஓட்டல் மேனேஜரையும் கைது செய்தனர்.

இதில், சுனிதா பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் என்பதும், பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த பெண் ஏற்கனவே 2 நபர்களை மசாஜ் செய்வதாக கூறி ஏமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.