ரஷ்யாவுக்கு மாத்திரைகளை அனுப்பும் இந்திய – நன்றி சொன்ன அதிபர்

819

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே, ரஷ்யாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பும் இந்திய அரசுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, ரஷ்யாவிற்கு அடுத்த வாரத்திற்குள் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய அரசின் முடிவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் முடிவு, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் எனவும் கூறியுள்ளார்.