3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்

598

ஜம்மு – காஷ்மீரில் ரோந்துச் சென்ற இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு அருகே, இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், பயங்கரவாதிகளும் இணைந்து திடீர் தாக்குதலை நடத்தினர்.

இதில், சம்பவ இடத்திலேயே 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சுதாரித்துக் கொண்டு ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் பதிலடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் வீரர்களும் பயங்கரவாதிகளும் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, எல்லைப்பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தேவந்தர் ஆனந்த் தெரிவித்தார்.