உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட இஸ்ரோவுடன் ஒப்பந்தம்

439
ISRO

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பேரிடர் அவசர நிலையின்போது, உடனடியாக செயல்படுவதற்கான, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையை உருவாக்குவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன், உள்துறை அமைச்சகம் செய்துள்ள ஒப்பந்தத்தால் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில், எந்தவித தாமதமும் இல்லாமல், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான தொழில்நுட்பத்தை, இஸ்ரோ வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.