இந்தியன் சூப்பர் லீக் – இரண்டவது வெற்றியை ருசித்த நார்த் ஈஸ்ட்

731

ஐ.எஸ்.எல். எனப்படும் 10 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் 86-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் பெரைரா ஒரு கோல் அடித்து ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தார். இறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of