திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி

476

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு திமுக கட்சி இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருகின்றது. முதலில் வேகம் காட்டிய அதிமுக, தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க முடியாமல் தத்தளித்து வருகின்றது.ஆனால், அதே நேரத்தில் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க திமுக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனும் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அவர்களுக்காக ஒரு தொகுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இன்னும் சில மணி நேரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கப்படம் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of