7 மாதக் குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

784

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷாலினா பத்மநாபா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இவருக்கு குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

பிறக்கும் போதே அந்த குழந்தைக்கு பல்வேறு உடல்நலக்கோளாறுகள் இருந்ததால், 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னரும் குழாய் மூலம் உணவு செலுத்துதல் போன்ற தனிக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

குழந்தைக்கு 7 மாதம் ஆன நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அந்த குழந்தை இறந்தது. குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் குழந்தையின் தலையிலும், கால்களிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், குழந்தையின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலில் உண்மையை மறைத்த அந்த பெண், பின்னர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து வாக்குமூலம் அளித்த அவர், எனக்கு வலிமையான குழந்தை தான் வேண்டும். எனவே அந்த குழந்தையை கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.