அமெரிக்க தேர்தலை சந்திக்கும் இந்திய வம்சாவளி பெண்..!

501

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் நிற்கிறார். இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடன் சூளுரைத்துள்ளார்.

இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் தன்னுடன் இணைந்து துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் ஜோ பிடன் தீவிரம் காட்டி வந்தார்.

இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர் னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என ஜோ பிடென் அறிவித்துள்ளார்.  அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அவர் உறுதிப்படுத்தினார்.

Advertisement