இந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை!

270

பார்லிமென்ட் நிலைக்குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் 1980 – 2010ல் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து பார்லிமென்ட் நிலைக்குழு லோக்சபாவில் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய நிதி மேலாண்மை பயிற்சி மையம், தேசிய பொதுக் கொள்கை மற்றும் நிதி பயிற்சி மையம் தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் ஆகிய அமைப்புகள் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்து தனித் தனியாக ஆய்வு நடத்தி அதன் மதிப்பு பற்றி தோராயமாக ஒரு தொகையை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி 1980 – 2010 காலகட்டத்தில் இந்தியர்கள் ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை வெளிநாடுகளில் பதுக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்து, பான் மசாலா, குட்கா, புகையிலை, திரைப்படம், கல்வி ஆகிய தொழில்களில் இருந்து தான் அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.