பாக். தாக்குதலுக்கு தக்க பதிலடி

196
pak-7.3.19

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்செரா எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் வீடுகள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதே மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியிலும் நேற்று காலை பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்தது.

இதேபோல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலையில் தொடர் தாக்குதல் நடத்தியது. துப்பாக்கி சூடு, சிறிய ரக பீரங்கி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவங்களில் இந்திய தரப்பில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of