10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எத்தனை?- உயர்நீதிமன்ற கிளை

68
madurai-high-court-issue

ரஷ்ய கப்பல் விபத்தில் மாயமான இந்தியர்களை திரும்ப மீட்கக்கோரி, செபஸ்டின் பிரிட்டோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா என்றும், இந்திய கடற்பரப்பில் ஏற்படும் விபத்து தொடர்பாக விசாரணை அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எத்தனை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆண்டு வாரியாக அறிக்கை தர வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.