தங்களின் அறிவை வெளிநாட்டிற்கு பயன்படுத்துவதால் இந்தியாவின் வளர்ச்சி பின்தங்கியிருக்கிறது – இஸ்ரோ தலைவர் சிவன்

746

இந்தியர்கள் வெளி நாட்டிற்கு தங்களின் அறிவை பயன்படுத்துவதாலேயே இந்தியாவின் வளர்ச்சி பின்தங்கியிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலிருந்து செல்லும் அனைத்து செயற்கை கோளும் கூட்டு முயற்சியின் மூலமாகவே வெற்றிபெற முடிந்ததாக கூறினார்.

அமெரிக்கா விண்வெளிக்கு மனிதர்களை தான் அனுப்பியது, ஆனால் இந்தியா அதைவிட ஒருபடி மேலே சென்று ரோபோட்டை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

மீனவர்கள் சர்வதேச எல்லையை கடக்கும் போதும் ஒலி எழுப்ப கூடிய அளவில் செயலி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement