ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி – அப்ரூவர் முகர்ஜீ

715

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி என்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் தான் ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்படுள்ளார்.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திராணி முகர்ஜியும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் மகள் கொலை வழக்கில் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement