25 வயது பூர்த்தியாகாத பொன்னுத்தாய்! அதிகாரிகளின் அலட்சியத்தால் பெரும் சர்ச்சை!

684

நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது. இதில் தென்காசி தொகுதியில் அதிகமான பரபரப்பு உள்ளது என்றே சொல்லலாம்.

ஏனென்றால், இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் இல்லாமல் சுயேச்சைகளாக மேலும் 3 பொன்னுத்தாய்கள் போட்டியிடுவதால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு கூறுகிறது.

ஆனால் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கோ. பொன்னுத்தாய்க்கு 24 வயதுதான் ஆகிறது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.