செய்னா நேவல் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறிள்ளார்.

347

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் ஹீ பிங்ஜியாவோ மோதினர்.

முதல் செட்டை 18–21 எனக் கோட்டைவிட்ட செய்னா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21–12 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய செய்னா 21–18 என வென்றார்.

மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் செய்னா 18–21, 21–12, 21–18 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of