காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி – வெளியேறிய பி.வி.சிந்து

542

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகளில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனையான பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார், இந்நிலையில் தற்போது இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் , தொடக்க சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஒஹோரியை பி.வி சிந்து எதிர்கொண்டார்.

போட்டி தொடங்கியது ஆட்டத்தின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை கை ஓங்கியிருந்தது. ஆனாலும் சிறப்பாக ஆடிய பிவி சிந்து 2வது மற்றும் 3வது சுற்றுக்களை கைப்பற்றி அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில், பிவி சிந்து அயா ஒஹோரியை வெற்றி கொண்டார். இதனை தொடர்ந்து காலிறுதி போட்டிகள் நடைபெற்றன, இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனையான சயாகா டகாஹாஷியாவை எதிர்கொண்டார்.

ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி சிந்து அடுத்தடுத்த சுற்றுகளில் தொய்வை சந்தித்தார். ஆட்ட இறுதியில் பிவி சிந்து 21-16, 16-21, 19-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இந்த தோல்வியை அடுத்து அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of