ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா பந்துவீச்சில் இந்தியா திணறல்

520

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா பந்துவீச்சில் இந்தியா திணறல்

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்., 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து, அகர்வாலும், ராகுலும் இந்திய அணிக்கு தொடக்கம் அளித்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ராகுல், 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் அகர்வாலுடன் இணைந்த புஜாரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், அரைசதம் விளாசி அசத்திய ”அகர்வால்”, 77 ரன் மற்றும் கேப்டன் ”விராட் கோலி” 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சற்றுமுன்வரை இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.

உடல் தகுதியடையாத ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of