மருத்துவர்கள் அலட்சியம்…, கை குழந்தை உயிரிழப்பு

633

கோவை ஆவாரம்பாளையம் தனியார் மருத்துவமனையில் விக்ரம் பவித்ரா என்ற தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் பிறந்தததையடுத்து இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தை திடீரென உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இறந்த குழந்தையை பெற்றோரிடம் தரும் பொழுது தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் தலையில் அணிவித்திருந்த தொப்பியை கழட்டி பார்த்தனர். அதில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவு இருந்தது.

ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்த பொழுது குழந்தை மருத்துவர்கள் கையிலிருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இறந்த குழந்தையை கையில் வைத்தபடி பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என அனைவரும் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குழந்தை உடல் ரீதியான பாதிப்பில்தான் உயிரிழந்தது எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை உறுதி செய்ய உடற்கூறாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெற்றோர்கள் உடற்கூறாய்வு செய்ய மறுப்பு தெரிவித்து தங்களது குழந்தையை இறுதிச்சடங்கு செய்ய கொண்டு சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of