கோழி, மீன் கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதால் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம்

897

வத்தலக்குண்டு அருகே குடியிருப்பு பகுதியில் கோழி மற்றும் மீன் கழிவுகளைக் கொட்டுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சிக்குட்பட்ட 6 வார்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வத்தலக்குண்டில் செயல்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட கோழிக் கடைகள் மற்றும் மீன் கடைகளின் கழிவுகள் இந்த பகுதியில் கொட்டப்படுகின்றன.

குடியிருப்பு பகுதிக்கு அருகே பிரதான சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதால், அந்த பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றசாட்டினர்.

Advertisement