நீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.

1521

சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும்  உரிமையியல், குற்றவியல்  அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட பெரும்பாலும் ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். அனைத்துக் குடிமக்களும் தமது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுக இயலும் எனப் பொதுவாக அறியப்படுகிறது.

மேலும் பலர் அறியாத சில தகவல்கள் பொதுவாக நாடளுமன்றம் மற்றும் சட்டமன்றம் போன்றவற்றில் நடக்கும் நிகழ்வுகளை ஊடகத்தில் பார்த்திருப்போம் ஆனால் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளை ஊடகத்தில் காண்பிப்பதில்லை அதற்கு பதிலாக நீதிமன்றத்தின் கட்டிடத்தையும் மக்கள் நடமாட்டத்தையும் மட்டுமே புகைபடமாகவும் அல்லது காட்சி படமாகவுமே ஊடகத்தில் காட்டப்படுகிறது. ஏன் இவ்வாறு காட்டப்படுகிறது என நம்மில் சில அறியாமல் இருப்போம்.

அவ்வாறு ஊடகத்தில் ஒளிபரப்பினால் நீதிபதிகளை முன் விளம்பரம் படுத்தும் விதமாகவும் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாகவும் அமையும் எனவும் வழக்குகள் பல கட்டத்தில் விசாரிக்க கூடும் அவைகளில் சில காட்சிகள் மட்டும் ஒளிபரப்பினால் நீதிபதிகள் ஒரு சாரார்க்கு ஆதரவாக செயல்படுவதாக பார்ப்பவர்களுக்கு நேரிடும்.

அவை மட்டும் இல்லாமல் நீதிபதிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றங்கள் அந்தரங்கமாகிவிடும் என்பதாலும் காணொளி மூலம் தேவையற்ற விமர்சனங்கள் பரப்பரப்புகள் வரும் என்பதால் வழக்குகள் முடிக்க இது ஒரு தடையாக அமையும். ஆகையால் ஊடகத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் நடைப்பெறும் போது  பொதுபார்வையாளராக சிலர் மட்டும் அனுமதிக்கபடுகின்றனர்.

குற்றம் செய்தவர் தகுந்த ஆதாரத்துடன் குற்றவாளிகள் என நீதிபதியால் நிருபிக்கப்பட்டால் அவருக்கு என்ன தண்டை என்பது மற்றொரு நாளில் அறிவிக்கப்படும்.

என்னென்றால் அவருக்கு தண்டை நிறைவேற்றுவதற்கான சில சட்டத்துக்குறிய காரியங்கள் மற்றும் எழுத்து பூர்வமான ஆவணங்களை அரசாங்கத்திடம் கொடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே தீர்ப்பு ஒரு நாளிலும் தண்டைனை வேறோரு நாளிலும் அறிவிக்கப்படுகிறது.

ஏன் வழக்கறிஞர்கள் கருப்பு நிற உடை அணிகிறார்கள்:-

வழக்கஞறிர் சட்டம் 1962ல் வழக்கறிஞர்கள் தெளிவான மற்றும் கன்னியமான ஆடை அணிய வேண்டும் என கட்டாயம் ஆக்கப்படுகிறது. மேலும் நீதிபதிகளின் ஆடை பகட்டானதாக இருக்க கூடாது என்றும் வழக்கறிஞர்களின் ஒழுக்கத்தை வெளிகாட்டும் ஆடையகாவும் நீதிக்காக போரடும் நம்பிக்கை ஏற்படுத்தும் ஆடையாக இருக்க வேண்டும் என்றும் பிற துறை துறையின் ஆடையில் இருந்து வேறுப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் கருப்பு ஆடை அணிகிறார்கள்.

மேலும் கருப்பு நிறம் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை குறிக்க கூடியது ஆகும். அறிவு,திறமை,நம்பகத்தன்மை பாதுகப்புணுர்வு மற்றும் கீழ்படிதலை உணர்த்தும் நிறமாக குறிக்கப்படுகிறது.

எனவே  தீங்கின்மையையும்,தூய்மையையும் அடையாள படுத்த வெண்ணிற கழுத்து பட்டையை அணிகின்றனர். இந்திய நீதிபதிகள் ஒருவர்க்கு தீர்ப்பு வழங்கியதும் பேனாவின் முனையை உடைத்து விடும் வழகத்தை வைத்திருக்கின்றனர். இந்த வழக்கம் இன்னும் தொடர்வதற்கு முக்கியம் காரணம் இருக்கிறனர்.

அது என்னவென்றால் ஒருவரின் மரண தண்டனை கொடுத்து முடித்து வைக்கும் பேனா வேற எந்தவொரு காரணாத்துக்கும் பயன்படகூடாது என்றும் மற்றொருவரின் வாழ்வும் இந்த மாதிரி முடியகூடாது என்று பேனாவின் முனையை நீதிபதி உடைத்து விடுகிறார்.

மேலும் தண்டனை கொடுத்த பின் அதனை திருத்தம் செய்யவோ அல்லது மறுபரிசிலனை செய்ய  அதிகாரம் இல்லை என்பதை அதிகாரம் படுத்தும் விதமாக பேனாவின் முனை உடைக்கப்படுகிறது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of