எதிர்பாராதவிதமாக உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் | Afghanistan

540

தலிபான் பயங்கரவாதிகளை தங்களது நாட்டில் இருந்து ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டு அரசும் அமெரிக்கா படைகளும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை அதிக அளவில் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்ஹர்கர் மாகாணத்துக்குள்பட்ட ஹயானி மாவட்டத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் எதிர்பாராதவிதமாக அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of