காவிரியில் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

180

காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வருவாய் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி கரையோர மக்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும்  ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தவிட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என்றும் காவிரி ஆறு அருகே புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.