320-க்கும் மேற்பட்ட.. ரகசிய தகவல்.. எச்சரித்த உளவுத்துறை..

681

சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஊடுருவல் முயற்சிகள் அதிகரிப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இதன்படி, 320 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள்  ஊடுருவ காத்திருக்கும் வகையில்  எல்லை கட்டுப்பாட்டுப் பாதையில் பாகிஸ்தான் 27 இடங்களில் பதுங்கி உள்ளனர் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதையடுத்து,பயங்கரவாதிகளின் பல உரையாடல்களை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) ஒட்டு கேட்டத்தில் இந்த  விவரம் தெரியவந்து உள்ளது.

இது தொடர்பாக, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையல் குப்வாரா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில்,10 கிலோ வெடிமருந்து ஏகே- 47 ரகதுப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement