அந்த காலத்தில் இந்திய எப்படி இருந்தது. சுவாரஸ்ய தகவல்கள்

2104

நம் நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டு ஆகிறது. இந்த 72 ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ கால மாற்றங்களையும், காட்சி மாற்றங்களையும் பார்த்த நமக்கு, அந்த கால கட்டங்களில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை நம் கண்முன்னே காட்சி படுத்துகிறது இந்த செய்தி தொகுப்பு…

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15ல் நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை என்பது நமக்கு தெரிய வாய்ப்பு மிக குறைவே. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இன்று நாம் தேசிய கொடியை பேப்பர், பிளாஸ்டிக் என பல்வேறு வகை மூலபொருட்களால் தயாரித்து பயன்படுத்துகின்றோம். ஆனால் அக்காலத்தில் கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும். மற்ற வகை துணிகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையே சில ஆயிரங்களில் உள்ள நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா மட்டுமே அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ரூபாய் மட்டுமே.

நாணயங்கள் காலத்திற்க்கு காலம் மாறுபடுகின்றது.1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா குடியரசாக ஆகும்வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பொருத்தவரையில்..

ஒரு ரூபாய், அரை ரூமாய், கால் ரூபாய், 2 அணா, 1 அணா, 1/2 அணா, 1 பைசா.

அதே போல ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய நோட்டு புத்தகத்தின் பாதி அளவு இருக்கும்.

1947-ல் இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு சமமாக இருந்தது.

இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தைகொண்டாடுகின்றன.

இந்தியாவில் சுதந்திரத்தின் போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன.

இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிக முறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று பெயர் பெற்றார்.

அந்த காலத்து உணவு விடுதிக்கு சென்று வயிறு நிறைய உணவு சாப்பிட்டாலும் மனக்கணக்கு போட்டே சொல்வார்கள் ஒருவர் சாப்பிட்டதிற்கான தொகை என்னவென்று.

உணவின் சுவையிலும், பணத்தின் மதிப்பிலும், மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் அக்காலம் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல என்றே கூறலாம்.

300 வருடங்களுக்கும் மேலாக அடிமைகளாய் அடிபட்டு, மிதிபட்டு, பின் சுதந்திரப்பட்டு இன்று தன்னை ஒரு ஜனநாயக நாடாய் வரிந்து கொண்டு மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய தேசம் நம்பிக் கொண்டு இருப்பது தன்னுள் மிகுதியாய் நிறைந்து கிடக்கும் இளைஞர்களைத்தான்…. பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்போம்…இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்…..ஜெய்கிந்……

Advertisement