நாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About EARTH

1150

நாம் வாழ்கின்ற இந்த பூமிக்கு வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் அதாவது சுமார் 450 கோடி ஆண்டுகள். அனுதினமும் பலகோடி அதிசயங்கள் நிகழும் இந்த பூமியை பற்றி பெரிதும் அறியப்படாத சில சுவாரசிய தகவல்களை பின்வருமாறு காணலாம்.

Earth

மெர்க்குரி, வீனஸ், யுரேனஸ் என்று ரோமானிய கடவுள்களின் பெயர்களிலேயே இந்த பேரண்டத்தில் உள்ள எல்லா கிரகங்களும் அழைக்கப்படுகிறது, ஆனால் பூமி மட்டுமே “Ertha” அதாவது நிலம் என்று பொருள்பட்டு “Earth” (பூமி) என்று அழைக்கப்படுகிறது.

Earth-1

ஒரு கன சென்டிமீட்டருக்கு 5.52 கிராம் என்ற அடர்த்தியுடன் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் அடர்த்தியான கிரகம் என்ற பெயரை பெற்றது பூமி.

earth-2

பூமியின் சுழற்சி படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இது மிக மிக பொறுமையாக நடைபெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது 100 ஆண்டுக்கு 17 மில்லிசெகண்ட் என்ற அளவில் பூமியின் சுழற்சி குறைந்து வருகின்றது. உதாரணமாக இந்த சுழற்சியின் குறைவால் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்ற அளவில் இருந்து 25 மணி நேரம் என்ற அளவிற்கு மாற சுமார் 140 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

அண்மையில் நாம் அதிகமாக அழித்த ஒன்றாக கருதப்படும் ஓசோன் படலம் ஒரு சிறப்பு வகை பிராணவாயு, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களை தடுக்கவல்லது.

everest

பூமியின் முதல் உயிரினம் கடலில் இருந்தே தோன்றியது.

marina

பூமியின் உயரமான இடமாக கருதப்படுவது 8,800 மீட்டர் உயரம் கொண்ட எவெரெஸ்ட் சிகரம், உலகின் மிகவும் ஆழமான இடமாக திகழ்வது பசுபிக் பெருங்கடலில் உள்ள சுமார் 11000 மீட்டர் ஆழம் கொண்ட “Challenger Deep” என்ற இடமாகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of