செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய சுவாரசிய தகவல்கள்..!

8244

சென்னை நகரத்தின் மிகவும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி தான். இந்த ஏரியை பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்..

1. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஏரி, 9 கிலோ மீட்டர் சுற்றளவும், 24 அடி உயரமும் கொண்டது.

2. முதன்முதலில், 19.5 அடியாக தான் அதன் நீர்மட்டம் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 22 அடியாக மாற்றப்பட்ட நிலையில், தெலுங்கு கங்கைத் திட்டத்திற்காக 24 அடியாக உயர்த்தப்பட்டது.

3. 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 ஆயிரம் அடி நீளத்தில் தானாகவே உபரிநீர் வெளியேறும் கலங்கல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இந்த ஏரி கொண்டுள்ளது.

4. விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் திறன் இந்த ஏரிக்கு உள்ளது. தற்போது, ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது.

5. பல்வேறு நீர்நிலைகளின் மூலம், அடையாறு ஆற்றுக்கு 808 சதுர கி.மீ நீர் மொத்தமாக வந்து சேரும். இவற்றில், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு மட்டும் 358 சதுர கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த செம்பரம்பாக்கம் ஏரி, டிசம்பர் மாதத்தில் மட்டும் சென்னையை மிரட்டத் தொடங்கிவிடுகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர். ஆனால், இந்த முறை அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement