அருண் ஜெட்லீ 1952 – 2019 அறியாத பத்து தகவல்கள் | Arun Jaitley Unknown Facts

414

1. அருண் ஜெட்லீ 28 டிசம்பர் 1952ம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர்.

2. டெல்லியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஜெட்லீ டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை படிப்பை முடித்தார்.

3. அருண் ஜெட்லீ நிதி, பாதுகாப்பு, தகவல் மற்றும் ஒளிபரப்பு, சட்டம் மற்றும் நீதி அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர்.

4. 1975 முதல் 1977 வரை நிலவிய ஏமர்ஜென்சி காலகட்டத்தில் அருண் ஜெட்லீ அம்பாலா மற்றும் திகார் சிறையில் சிறைவைக்கப்பட்டார்.

5. பொருட்கள் மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படும் GSTயின் நாயகனாக திகழ்பவர் அருண் ஜெட்லீ

6. 2014ம் ஆண்டு பாஜக பெற்ற மாபெரும் வெற்றிக்கு சூத்திரதாரியாக திகழ்ந்தவர் அருண் ஜெட்லீ

7. அருண் ஜெட்லீ ஒரு கிரிக்கெட் பிரியர். டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் என்று அழைக்கப்படும் DDCAவின் தலைவராகவும் BCCIயின் துணை தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

8. அருண் ஜெட்லீ அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கெளதம் காம்பிர்

9. 2014ம் ஆண்டு அவர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங் என்பவரிடம் தோல்வியை தழுவினார்.

10. மோடி ஆட்சியில் GST, Demonetization உள்ளிட்ட சில முக்கிய பொருளாதார முயற்சிகளை மேற்கொள்ள பெரும் துணை புரிந்தது அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லீ தான்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of