இடைக்கால பட்ஜெட் 2019 – சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு

361

மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் சில சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் இன்று மத்திய இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தாக்கல் செய்கிறார்.

இதில் பல சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டம், உணவு மானியத்துக்காக, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் ரத்து, முறையாக கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டி ரத்து போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தங்கத்தின் மீதான வரி குறைப்பு, சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டை உயர்த்துதல் போன்ற அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு, வருமான வரிச் சலுகை அறிவிப்பும் வெளியாகலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில், 4,000 கோடி ரூபாய் முதலீடு, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கு குறைவாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு, கடன் வட்டியில் சலுகை போன்றவை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of