இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? இன்றைய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இருக்குமா?

1375

இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு புதிய அறிவிப்புகள், சலுகைகள் இருக்குமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் பெருமளவில் எழுந்துள்ளது. எனவே, இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன, அதில் முக்கிய அம்சங்கள் இருக்குமா என்பது குறித்து விரிவாக  கொடுக்கப்பட்டுள்து.

இடைக்கால பட்ஜெட் என்பது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யமுடியாத அவசர காலங்கள் மற்றும் தேர்தல் வரப்போகும் நேரங்களிலும் தாக்கல் செய்யப்படுவது ஆகும். இதுவரை, 14 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் இடைக்கால பட்ஜெட்டை, 1947-ம் ஆண்டு, முதல் நிதி அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார், நவம்பர் 26-ம் தேதி தாக்கல் செய்தார்.

கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வருவதற்கு முன், பிப்ரவரி 17-ம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

அதன்பின், தற்போது, 15-வது இடைக்கால பட்ஜெட்டை, அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தாக்கல் செய்கிறார்.பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில், கொள்கை முடிவுகளோ, அதிரடி சலுகைகளோ அறிவிக்கப்படாது என்பது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டுள்ள மரபு ஆகும்.

பொதுவாக, நிதி ஆண்டு தொடக்கமான ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல் நான்கு மாதங்களுக்கான, மத்திய அரசு ஊழியர் சம்பளத்திற்கான தொகை, மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஆகியவை மட்டுமே, இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும்.

இந்த செலவினங்களுக்கான ஒப்புதல் பெறும் வகையில்தான் இடைக்கால பட்ஜெட் தொடர் இருக்கும் என்பதுதான் மரபு…ஆனால், இந்த முறை, இடைக்கால பட்ஜெடில், புதிய அரசின் முழுமையான பட்ஜெட்டிற்காக காத்திராமல், பல அதிரடி அறிவிப்புகளையம், சலுகைகளையும் அறிவிக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் இருக்கும் வகையில், பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாவதால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, முதன்முறையாக இந்த இடைக்கால பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of