மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கலாகிறது!

132

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நேற்று தொடங்கியது.இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மக்களவையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் வகித்த நிதித்துறையை கூடுதலாக கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்குவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு சலுகை போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்குவதால் தமிழகத்துக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.