இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்ற அழகிய தமிழ் வார்த்தையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னது இணையத்தில் படுவைரலாகி வருகிறது

636

கனடாவில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும் எப்போதுமே இந்தியர்கள் மீது தனி பாசம் அவர் இந்திய மற்றும் தமிழ்ப் பண்டிகைகளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர்.

மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு குறிப்பாக இந்திய மக்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் அவருக்கு நம் நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ்கள் உண்டு.

கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். எப்போதுமே கோட்-சூட்டுடன் இருக்கும் ஜஸ்டின் இன்று நம்முடைய பாரம்பரிய உடையான வேட்டி சட்டைஅணிந்திருந்தார்.

தமிழ் வணக்கம் இந்த வருடமும் ஜஸ்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.

“வணக்கம்” என்று தமிழில் பேச்சை தொடங்குகிறார் ஜஸ்டின். பிறகு ஆங்கிலத்தில் தமிழர்களின் சிறப்பை எடுத்து கூறி இறுதியாக “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று மழலை தமிழிலேயே சொல்லி முடிக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of