போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்

294

காஞ்சிபுரத்தில், போதை பொருள் ஒழிப்பு தின பேரணியின் போது, மது போதையில், ஒருவர் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காஞ்சியில் நடைபெற்ற இந்த பேரணியை ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் காவல்துறையினர் மருத்துவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஊர்வலம் சென்றனர்.

அப்போது மது போதையில் ஒருவர் சாலையில் தள்ளாடியபடி இருந்தது பேரணி சென்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of