அமெரிக்காவில் பனியின் காரணமா இருப்பு பாதையில் தீ வைத்து ரயில்கள் இயக்கம்

396

ஆர்க்டிக் துருவத்தின் மேலடுக்குக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், அமெரிக்காவில் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி ஏற்பட்டுள்ளது.கடும் பனி காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல், சிகாகோவில் உள்ள மிச்சிகன் ஏரி முழுதும் உறைந்து போய்விட்டன.ரயில் சேவைக்காக பழைய முறையான தண்டவாளத்தில் தீ வைத்து, பாதையை சூடாக்கி ரயில்கள் இயக்கப்படும்.

அந்த வகையில் தற்போது தண்டவாளத்தில் தீ வைப்பதற்கு மாற்றாக, எங்கு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதோ அங்கு மட்டும் கியாஸ் மூலம் தீப்பிழம்புகள் ஏற்படுத்தப்பட்டு  இரும்பு பாதைகள் சூடாக்கப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ மெட்ரோ போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of