சர்வதேச பெண்கள் தினம் மகளிர்களுக்கு கவுரவம் அளித்த ஏர்இந்தியா

117

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 08) ஏர் இந்தியா நிறுவன விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்க உள்ளனர்.

இதில் 12 சர்வதேச விமானங்களும், 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் அடங்கும். இந்த விமானங்களில் விமானி, துணை விமானி மற்றும் பணிப்பெண்கள் என அனைத்து பிரிவிலும் பெண்கள் வலம் வர உள்ளனர்.

டில்லி – சிட்னி, மும்பை – லண்டன், டில்லி – ரோம், டில்லி-லண்டன், மும்பை-டில்லி-ஷங்காய், டில்லி-பாரீஸ், மும்பை-நியூயார்க், டில்லி-நியூயார்க், டில்லி-வாஷிங்டன், டில்லி- சிகாகோ இடையேயான வழித்தடங்களில் செல்லும் விமானங்களை இந்தியப் பெண்கள் இயக்க உள்ளனர்.

 

இந்த விமானங்களில் பெரும்பாலானவற்றில் தொழில்நுட்ப பிரிவிலும் பெண் இன்ஜினியர்கள், டெக்னீசியன்கள், உதவியாளர்கள், சேவை பிரிவில் டாக்டர்கள் உள்ளிட்டோரும் பெண்களே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.