மனவளர்ச்சி குன்றியோருக்கான சர்வதேச அளவிலான பெண்கள் நெட்பால் போட்டியில் இந்திய அணி வெற்றி

653

புதுச்சேரியில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்ற தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த பெண்கள் நெட்பால் போட்டி தொடங்கியது.

இதில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மூன்று அணிகள் பங்கேற்று விளையாடின. இதில்14 வயதில் இருந்து18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் போட்டியில் 5 அறிவுசார் குறைபாடுள்ள நபர்கள் மற்றும் 4 பெண் வீரர்கள் என ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 9 பேர் இடம்பெற்று விளையாடினர்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் 11க்கு 7 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முதலிடத்தையும், 2 ஆம் இடத்தை இலங்கை அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அகர்வால் ஆகியோர் கேடையம் மற்றும் கோப்பைகளை வழங்கினர். இதில் சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் இயக்குனர் விக்டர் வாஸ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of