அறிமுகமாகும் புதிய 20 ரூபாய் நாணயம்!

157

இந்தியாவில் விரைவில் 20 ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்படும் என மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது.

இந்த நாணயம் மற்ற பழைய நாணயங்களை போல் அல்லாமல், பன்னிருகோணம் எனும் உருவில் புதிய வடிவமைப்பை பெறவுள்ளது. இந்நாணயம் தொடர்பாக நிதித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

coin

இதில் 27 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த புதிய ரூ.20 நாணயத்தில், மூன்று வகையான உலோகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ.10 நாணயத்தில் ஓரங்களில் நுட்பமான வெட்டுகள் போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இந்த ரூ.20 நாணயத்தில் அதுபோன்று ஏதும் இல்லாமல் உருவாக்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.