தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை

935

சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் ரேவதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வின்ஸ்டார் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி மற்றும், நிலம் வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ரேவதியின் சகோதரி திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை அந்த நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார்.

மேலும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு வின்ஸ்டார் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிண் பணம் மற்றும் அந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் மோகனாவுக்கு கடந்த 12ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. எனவே திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால், வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை தருமாறு, அதன் உரிமையாளர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், பணம் தரமுடியாது என்று சிவக்குமார் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மோகனா நேற்று உயிரிழந்தார்.

Advertisement