ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – சிதம்பரத்தின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு

296

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை முடித்த டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இன்று ஜாமீன் கிடைத்தால் அவர் திகார் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of