ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை உத்தரவு, மூன்றாவது முறையாக உச்சநீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை, கைது செய்வதற்கு தடை விதிக்கக்கோரும் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தரப்பு வாதம் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் இன்று, அமலாக்கத்துறை சார்பாக வாதம் நடைபெற்றது.
அப்போது, ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் செயலோ,வேட்டையாடும் செயலோ அல்ல என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார்மேத்தா தெரிவித்தார். வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான், ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதிகோருகிறோம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாதுரியமாகவும், அறிவுபூர்மாக ஆதாரங்களை மறைத்து, ப.சிதம்பரத்தால், வெளிநாடுகளில் இருந்து பணம் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது. மேலும், அமலாக்கத்துறையின் வாதங்கள் நாளை முடித்துக்கொள்ளப்படும் என்றும் துஷார்மேத்தா தெரிவித்தார்.
இதையடுத்து, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு நாளை வரை தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம், மூன்றாவது முறையாக, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான ஜாமின் மனு நீட்டிக்கப்பட்டுள்ளது.