அயோடின் கரைசலால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் – ஆய்வில் தகவல்

1496

அயோடின் கரைசலை பயன்படுத்தி வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
vovt
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் அயோடின் கரைசலை பயன்படுத்தி வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கனெக்டிக்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், போவிடோன் என்ற அயோடினின் மூன்று வெவ்வேறு செறிவுகளுக்கு எதிராக வைரஸ் மாதிரிகளை பரிசோதித்துள்ளனர்.

அப்போது, 15 விநாடிகளுக்குள் வைரஸை முழுமையாக செயலிழக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 0.5 அயோடின் செறிவு சார்ஸ் வைரஸை முற்றிலுமாக செயலிழக்கம் செய்யும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.