ஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா? தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்!

725

பெண்களின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த குற்றங்களுக்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஐபிசி 100 சட்டம் குறித்து தற்போது காண்போம்…

பெண் மேன்மையானவள், பெண் உருவாக்குபவள், பெண் தீர்மானிப்பவள் என்றெல்லாம், மகளிர் தினத்தன்று வாழ்த்துகளை பலர் தெரிவித்தனர்.
ஆனால் இன்றும் பெண்களுக்கான உரிமைகள், சுயமரியாதைகள் கொடுக்கப்படுகிறதா என்றால், அது கேள்விக்குறியாக தான் உள்ளது.

இவ்வாறு பெண்களுக்கு பல்வேறு முறைகளில் அநீதி இழைக்கப்பட்டு வருவது என்பது வேதனை. இதுகுறித்து ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடூர சம்பவமே சாட்சி.

இந்த மாதிரியான குற்றங்களுக்கு அறிவுரை மட்டுமே கூறி வரும் நாம், அதற்கான சட்டங்கள் குறித்து ஆராய்ந்தது இல்லை என்று சொல்லலாம். தற்போது, தற்காப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன.

இதில் பிரிவு 100-ல் ஆண்கள், பெண்களின் உடன்பாடு இன்றி சீண்டும் போது தற்காப்பு உரிமை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருவர் நம்மை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் போதும், பாலியல் ரீதியாக தாக்கும் போதும், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படும் போதும், கடத்தப்பட்ட நிலையில் சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையிலும், தற்காப்பு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் போது, அந்த ஆண் உயிரிழந்தாலும் அதனை குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பன உள்ளிட்ட சில வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வரும் நிலையில், ஐபிசி 100 போன்ற சட்டங்கள் இருப்பதும், இதுகுறித்து போதிய விழிப்புணர்வு அளிக்க வேண்டியதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of