சென்னைக்கு 148 ரன்கள் இலக்கு.., வெல்லுமா தோனி & கோ?

339

ஐபிஎல் 12-வது சீசனின் 5வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பிரித்வி ஷா 16 பந்தில் 5 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். ரிஷப் பந்த் 13 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கொலின் இங்கிராம் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீமோ பால் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தவான் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்துள்ளது.

சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், சாஹர், தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரஹானே, வாட்சன் ஆரம்பம் முதலே அணியின் வெற்றிக்காக அதிரடியை தொடங்கினர். இதில் துரதிஷ்டவசமாக ரஹானே ஷர்மா விடம் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்பு களமிறங்கிய குட்டி தல சுரேஷ் ரைனா அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் ஆட்டத்தை தொடங்கினார். வாட்சன், சுரேஷ் ரைனா இவர்களின் கூட்டணி கண்டு டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் பதறுகின்றன.

சென்னை அணி இதுவரை ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓவர் முடிவிற்கு 51 ரன்களை சேர்த்து களத்தில் விளையாடி வருகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of