புல்வாமா தாக்குதல்.., சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த உதவி?

708

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்த அளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது, அதுதான் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் ஐபிஎல் 2019 சீசன் தான். இந்த சீசனின் தொடக்கப்போட்டியானது வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கயுள்ளது.

இதில் முதல் போட்டியோ அதிக ரசிகர்கள் பட்டாலத்தை கொண்ட, பலமுறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற தல தோனியின் தலைமையால் மஞ்சள் உடையணிந்து களத்தில் இறங்கினால் ரசிகர்கள் ஆரவாரத்தால் எதிரணியை பயமுறுத்தும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.

இவர்களை எதிர்கொள்ள விராட் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் கிடைக்கம் வருமானத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக வழங்கும் என தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் கர்னலாக உள்ள எங்கள் அணியின் கேப்டன் இதற்கான காசோலையை வழங்குவார்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of