விளையாட விரும்பியது இதுபோன்று அல்ல.., தோனி கவலை

905

நேற்று முன் தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019 முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதினர். இதில் பெங்களூர் அணியை 70 ரன்களில் சுருட்டி எளிதில் வெற்றியை தன் வசமாக்கிக்கொண்டது சென்னை அணி.

வெற்றிக்குக்குப்பின் சென்னை அணியின் கேப்டன் ‘தல’ தோனி பேசுகையில்,

“ஆடுகளம் இந்த அளவிற்கு ஸ்லோவாகவும், அதிக அளவில் பந்து திரும்பும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை.

இதே ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அப்போது பந்து இந்த அளவிற்கு திரும்பவில்லை. வழக்கமான ஆட்டத்தைவிட பயிற்சி ஆட்டத்தில் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக அடிக்கலாம்.

இந்த ஆடுகளம் சிறப்பான வகையில் மாற வேண்டியது மிகவும் அவசியமானது. தரமான ஸ்பின்னர்கள் இருந்தால் 80, 90 அல்லது 100 ரன்கள் என்றாலே மிகவும் கடினமானதாக இருக்கும்.

எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அடித்த ஷாட்டுகளை வைத்தும், மற்ற அணிகள் சிறப்பாக சுழற்பந்து வீச்சை கொண்டிருந்தாலும், நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் அல்ல” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of